திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தகரகுப்பம் கிராமத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் சுமார் 3 ஏக்கர் அளவிற்கு மரங்களை வெட்டி விவசாய நிலமாக்கும் முயற்சியில் ஆளுங்கட்சி பிரமுகர் ஈடுபடுவதாக, மல்லகுண்டா முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராமசாமி முன்னிலையில், 25 க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்யப்பட்டுள்ளது. இது ரிசர்வ் வனப்பகுதி என்றும் இந்த ஆக்கிரமிப்பை அகற்றி இந்த இடங்களில் மீண்டும் மரக்கன்றுகளை நட்டு காட்டு வளத்தையும் நாட்டு வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று வனத்துறைக்கும் வருவாய்த்துறைக்கும் கோரிக்கை வைத்தனர். நடவடிக்கையில் தாமதம் ஆனால் போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்தனர்.
– S.மோகன்